திங்கள், 16 மே, 2011

நட்பென்னும் டெபாசிட்டை.....

இப்போதெல்லாம் என் எதிரே வரும்
பெண்களைக் கூடக் கவனியாமல்,
நீ அனுப்பும் குறுஞ்செய்திகளை தான் என்
செல்லிடப் பேசியில் பார்த்துக் கொண்டே நடக்கிறேன்….

சில விளம்பரக் காட்சிகளில் ஒரு அழகான குழந்தையுடன்
சிரித்துக் கொண்டிருக்கும் தம்பதிகளைப் பார்க்கையில்,
நான் அந்த காட்சிகளில், நம்மைத் தான் உருவகப்படுத்திப் பார்க்கிறேன்..

என்னிடம் பைக் இல்லாத போதும்,
அடிக்கடி என் மனம் எனக்கு டாடா காட்டி
விட்டு உன்னுடன் பைக் ஏறிச் செல்கிறது..

நீ லேசாக உடம்பு சரியில்லை என்று சொன்னபோது, அந்த மாத்திரை சாப்பிடு, இந்த மருந்து
எடுத்துக்கோ என்று எம்.பி.பி.எஸ் படிக்காமலேயே டாக்டர் ஆகிறேன் நான்….

மனதிற்குள் தினமும் சாலமன் பாப்பையா வந்து ‘என் மனதில் உள்ளது நட்பா? காதலா?”
என்று பட்டிமன்றம் நடத்தி விட்டு தீர்ப்பை மட்டும் சொல்லாமல் செல்கிறார்…

இவ்வளவு நடந்தும் நான் ஏன் அமைதி கொள்கிறேன்,
உன்னுடைய மனதில் காதலன் பதவிக்கு போட்டியிட்டு
என்னுடைய நட்பென்னும் டெபாசிட்டை இழக்க எனக்கு தைரியமில்லையடி….


உண்மையில் பிறிதலே காதலை சொல்லும்

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

முட்டி மோதி
கட்டிப் புறல்கயில்
வழியாதக் காதலை
புறியாதக் காதலை

அவளைப் பிறிந்த
நொடியினில் அறிய தொடங்குவாய்
உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

அவளைப் பிறிந்ததும்
அவளோடு சேர்த்து
உன் மனதையும்
துளைத்ததை உனர்வாய்

இல்லாத மனது
கனக்கக் காண்பாய்
இதய துடிப்பு
மெதுவடையும்

உயிருடன் இருக்கின்றாயா
என்று சோதனை செய்வாய்
நடமாடும் பினமாவாய்
பேசும் ஊமையாவாய்

நீ ஆனா என்றும் – உனக்கே
சந்தேகம் வரும்

அவளைப் பிறிந்ததும்

முதலில் கவிஞனாவாய்
ஆனால் கவிதை எழுத வராது
உன் கிருக்கல்களை கவிதை என்பாய்
கவிதைகளை கிருக்கல்கள் என்பாய்

உன் மூலையோ
எல்லாம் ஹார்மோன்களின் சேட்டைகள்
அவளை மறந்திவிடு
என்று மந்திரம் ஓதும்

உன் மனதோ
அவளே உனக்குள்ளே
ஓடும் உயிரென்றுக்கூறும்

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்

இதுதால் காதலா என
உன்னையே நீ கேற்பாய்
உன்னையும் நம்பாம்மல்- உன்
நண்பனையும் கேட்ப்பாய்
ஆம் என்று பதில் வரும்

உன் கனவிலாவது
அவள் வரமாட்டாளா என
தினம் எதிர்ப்பார்த்து உறங்கச்செல்வாய்- ஆனால்
ஏமாற்றத்துடன்எழுவாய்

எதிர்ப்பாராமல் அவளைக்
காண மாட்டோமா என்று
எதிர்ப் பார்த்தே செல்வாய்

அவள் வீட்டின் நாயாவாய்
அவள் தெருவின் காவலனாவாய்
அவள் வளர்க்கும் ஆடும் மாடும்- உன்
உற்ற நண்பனாகும்

அவளுக்காக நடந்தே
உடல் இளைப்பாய்
உன்னோடு சேர்ந்து- உன்
செருப்பும் இளைக்கும்

அவள் உனக்கில்லை
என்றுத் தெரிந்தாலும்
அவளேக் காதலி
அவளைக் காதலி

உண்மையில்
பிறிதலே காதலை சொல்லும்
என்னவளே சிரிப்பை சிக்கனப்படுத்தாதே!
நீ இதழ்களால் சிரிக்கும் போது நான் இதயத்தால் சிரிக்கிறேன்!
நீ சிரிக்காத நாள் எனக்கு துக்க நாள்!
அன்றைக்கெல்லாம் என் இதயம் கறுப்பு சட்டை அணிந்து கண்ணீரில் மிதக்கிறது.........!!!
என்னைக் காதலி


கடல் வெள்ளம் போல் புகுந்து
கனவுகளை வளர்த்தவளே
...
காந்தப் பார்வையாலே
கண்களுக்குள் இனித்தவளே

தவறு நான் செய்யவில்லை
தண்டனை நீ தருகின்றாய்

சிறைக்குள் நான் துடிதுடிக்க
சிரித்து நீ போகின்றாய்

ஊமைக் குயிலடி நான்
உள்ளுக்குள் அழுகின்றேன்

ஓரிரு வார்த்தைளோ
மெல்ல மெல்ல கொல்லுதடி

என்
உதிரத்தால் எழுதி வைக்கும்
உண்மையடி பெண்ணே

நீ போகுமிடமெங்கும்
பாதி உயிரோடும்
என் பயணம் தொடரும்

புத்தகப் பையுக்குள்ளே
பாவத்தை சுமப்பவளே

இறந்து நான் போன பின்னே
என் இதயத்தை அறுத்துப்பார்

இதயச் சுவர்களில்
எழுதப்பட்டிருக்கும் உன் பெயர்

அப்போதாவது
நீ என்னைக் காதலி
உயிரும் உனக்கே...
அன்பே...

நான் சிந்தும் கண்ணீர் துளியில்...
உனது புன்னகை மொட்டுக்கள்
...மலரும் என்றால்...

என் ரத்தத்தை கூட நீராய்
ஊற்றுவேன் உனக்காக...

என்றும் கண்ணீர் சிந்தும் சந்தோசத்தில் நான்...

தெரிந்தும்..........!!!!!

கடற்கரை மணலில் பதிந்த கால்தடங்கலாய் அவளின் காதல் அழித்துவிட்டாள் கண்ணீர் என்னும் அலைகளை கொண்டு
கல்வெட்டுகளில் பதிந்த எழுத்துகளாய் 
என் காதல் மதுவை ஊற்றி அழிக்க முயல்கிறேன்
அழியபோவது நானும் என்று தெரிந்தும்..........!!!!

ஞாயிறு, 15 மே, 2011

காதல்” கீதாசாரம்...!!!




யாரை நீ காதலித்தாயோ...
அவள் வேறொருவனைக் காதலித்தாள்...
யாரை நீ காதலிக்கின்றாயோ...
...அவள் வேறொருவனைக் காதலிக்கின்றாள்...
யாரை நீ காதலிக்கப் போகின்றாயோ...
அவளும் வேறொருவனையே காதலிப்பாள்...

உன்னுடைய எதை இழந்தாய்..?
ஏன் தாடி வளர்க்கின்றாய்...
யாரை நீ கொண்டு வந்தாய்..?
அவளை நீ காதலிக்க..
யாருக்கு உன் காதலை சொன்னாய்...?
அவள் உன்னைக் காதலிக...
உன் பேச்சை விட
உன் மவுனம் தான்
எனக்கு மிகவும் பிடித்திருக்கின்றது
ஏனெனில் அதைத்தான் என் விருப்பபடி
மொழிபெயர்த்துக் கொள்ள முடிகிறது !!!!!

நீ வரும் பாதையில் உனக்காக காத்து இருந்தேன்... 
புள்ளிமான் போல துள்ளி வருவாய் என்று!
எழுதிய காகிதத்தை உனக்குத் தரகாத்து இருந்தேன்.
நீயும் மண மாலையுடன் வந்தாயே....
பக்கத்துவீட்டு பாலனுடன் எழுதிவைத்த காகிதமும் என்னை பார்த்து சிரிக்கிறது இதை எப்படித்தான்தாங்குவேனோ பெண்ணே.........!!